“நான் இந்த ஜாதி.. அப்படித்தான் கத்தி வச்சிருப்பேன்...”- காவலரை மிரட்டிய இளைஞர்...

கத்தி வைத்திருந்ததை தட்டிக்கேட்ட காவலரிடம் ஜாதிப் பிரிவைக் கூறி மதுபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
“நான் இந்த ஜாதி.. அப்படித்தான் கத்தி வச்சிருப்பேன்...”- காவலரை மிரட்டிய இளைஞர்...
Published on
Updated on
1 min read

சென்னை : கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தனியார் வளாகத்தின் உள்ளே நேற்று முன் தினம் இரவு 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக்கொண்டிருப்பதாக கே.கே நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சாதாரண உடையில் சென்ற கே.கே நகர் காவல் நிலைய  காவலர் விஜயராஜ் அங்கிருந்தவர்களை பிடிக்க முயன்றபோது 5 பேர் தப்பியோடிவிட ஒருவனை மட்டும் பிடித்துள்ளார்.

அப்போது அந்த நபர் காவலர் விஜயராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்த நிலையில், காவலர் விஜயராஜ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் தொடர்ச்சியாக கே.கே காவல் நிலைய ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர் ஜீவா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பிடிபட்ட நபரிடம் விசாரிக்க முயன்றபோது அவனிடம் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட வாலிபர் கே.கே நகர் கன்னிகாபுரம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்த கோகுல் (25) என்பதும் அவன் மீது ராமாபுரம், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், எதற்காக கையில் கத்தி வைத்துள்ளான் என்பது குறித்து கோகுலிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தான் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் எனவும், அப்படித்தான் கத்தி வைத்திருப்பேன் எனவும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் கோகுலை கைது செய்து அவன்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கோகுலின் சகோதரர் கோபி என்பவனும் கே.கே நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com