மட்டன் பிரியாணியில் பூனைக்கறியா...? பிரியாணிப் பிரியர்களே உஷார்...!

சென்னையில் சாலையோர பிரியாணிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் பூனைக்கறி கலக்கப்படுகிறதா..? இது உண்மையா...? புரளியா...வயிற்றில் புளியைக் கரைக்கும் இந்த சம்பவம் குறித்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

மட்டன் பிரியாணியில் பூனைக்கறியா...?  பிரியாணிப் பிரியர்களே உஷார்...!

பிரியாணி...பலரையும் மயங்க வைக்கும் ஒரு வார்த்தை.... பிரியாணி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. உயர் தரம்மிக்க ஹோட்டல்களிலும் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.  அதேநேரம் சாலையோர சிறிய கடைகளிலும் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. 

சாலையோரம் உள்ள பிரியாணிக்கடைகளில், சாமானிய மக்கள் சாப்பிடும் வகையில் கைக்கு அடக்கமான விலையில் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. பெரிய ஹோட்டல்களில் வாங்கி சாப்பிட முடியாதவர்கள், இந்த சாலையோரக் கடைகளில் பிரியாணியை ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

மேலும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை....பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?

பல இடங்களில், இந்த சாலையோரக் கடைகளில் பிரியாணி சுவையுடன்தான் இருக்கின்றன. ஆனால் பிரியாணியின் தரம் எப்படி உள்ளது. இதைப் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. சுடச்சுட, மட்டன் அல்லது சிக்கன் பீஸ்சுடன் கமகமக்கும் பிரியாணி கிடைத்தால், ஒரு பிடி பிடிப்பதுதானே வழக்கம். 

ஆனால் சாலையோரக் கடைகளில் குறைந்த விலையில் மட்டன் அல்லது சிக்கன் பிரியாணிகள் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியம். இதுபோன்று யோசிக்கும் நேரத்தில் தான் சாலையோர பிரியாணிக் கடைகளில் மட்டன் கறியுடன் பூனைக் கறி கலக்கப்படுகிறது என்ற தகவல் வெளியானது.

மேலும் படிக்க | போரால் உருக்குலைந்த உக்ரைன்…ஓராண்டை கடந்தும் நீளும் போரால் கண்ணீரில் மக்கள்...!

பிரியாணிப் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் இந்த செய்தி, விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் உதவியுடன் விலங்கின ஆர்வலர்கள்  சென்னை பாரிமுனையில் உள்ள நரிக்குறவர் இன மக்களின் குடியிருப்புகளில் சோதனை செய்தனர். 

அங்கு கழுத்தில் மணி கட்டப்பட்டு 11 பூனைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள்  திருடப்பட்டு, இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட, 11 பூனைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட 11 பூனைகளை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணி வசம் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் படிக்க | மீண்டும் ஆலா கார்ட் மெனு... இன்னும் ரயில் பயணம் இனிதாகும்!!

இது குறித்து கூறிய ஸ்ரீராணி, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கிறார். வீடுகளில் திருடப்படும் பூனைகள் பல்லாவரம், பொன்னேரி, பெசன்ட் நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், கருப்பு பூனையின் ரத்தம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறினார். 

எனவே சாலையோர அசைவ உணவுக் கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதே நேரம் இறைச்சியை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, வீடுகளில் சமைத்து உண்டால் உடலுக்கு மட்டுமல்ல நாய், பூனைகளுக்கும் நல்லது என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.

மாலை முரசு செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் விநாயகமூர்த்தி....

மேலும் படிக்க | உங்களால் நான்... உங்களுக்காக நான்....மறக்க முடியாத ஆளுமையின் 75வது பிறந்தநாள்!!!