போரால் உருக்குலைந்த உக்ரைன்…ஓராண்டை கடந்தும் நீளும் போரால் கண்ணீரில் மக்கள்...!

போரால் உருக்குலைந்த உக்ரைன்…ஓராண்டை கடந்தும் நீளும் போரால் கண்ணீரில் மக்கள்...!

ரஷ்யா - உக்ரைன் இடையே மூண்ட போரானது இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும்  என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைய போவதாக அறிவித்ததை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அதிகாலையில் உக்ரைன் மீது திடீர் தாக்குதலை நடத்த  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதுவொரு ராணுவ நடவடிக்கை என்றே முதலில் புதின் அறிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தினர் அதிரடியாக தரைவழியாகவும், வான் வழியாகவும் இரவு பகல் பாராது குண்டுகளை மழையாக பொழிந்தனர். வானில் இருந்து பனி மழையுடன் குண்டு மழையும் பொழிந்ததால், பாதுகாப்பான கூடாரங்களில் உக்ரைன் வாசிகள் தஞ்சம் புகுந்தனர். இதனால் உக்ரைனின் 70 சதவீதம் அளவிற்கு கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

வெளிநாடுகளில் இருந்து உக்ரைனில் தங்கியிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அந்தந்த நாடுகளின் உதவியுடன் விமானங்கள் மூலம் சொந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவிலிருந்து மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை மத்திய அரசு விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்டு வந்தது. 

இதையும் படிக்க : ஆளுநருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த முத்தரசன்...!

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் மின்சார உற்பத்தி, பொருளாதாரம், உள்ளிட்டவை வெகுவாக குறைந்தது.  கடந்த பிப்ரவரி 13 வரை உக்ரைனில் மொத்தம் 7 ஆயிரத்து 199 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 11 ஆயிரத்து 800 பேர் காயமடைந்ததாகவும்,  80 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில நாட்களில் முடிவடையும் என்று கருதப்பட்ட இந்தப் போர், பல மாதங்களாக நீடித்து தற்போது ஓராண்டை தாண்டியும் நீண்டு கொண்டிருக்கிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன. போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இம்மாத இறுதியில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி அச்சடித்து வெளியிட்டுள்ளது. தேசிய கொடி பின்னணியில் 20 ஹிர்வ்னியா கரன்சி வெளியிட்டுள்ளது. மேலும், உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவை ஒட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் உக்ரைன் நாட்டின் தேசிய கொடி ஒளிரவிடப்பட்டது.