மீண்டும் ஆலா கார்ட் மெனு... இன்னும் ரயில் பயணம் இனிதாகும்!!

மீண்டும் ஆலா கார்ட் மெனு... இன்னும் ரயில் பயணம் இனிதாகும்!!

கொரோனா காலத்தில் மூடப்பட்ட ஆலா கார்ட் மெனுவை மீண்டும் உருவாக்க ரயில்வே துறை அனுமதித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அதன் மெனு மற்றும் விலையையும் முடிவு செய்துள்ளது.

ரயில் பயணம் இன்னும் சுவை நிறைந்ததாக இருக்கப் போகிறது.   பூரி சப்ஜி, சாண்ட்விச் கட்லெட் மற்றும் டீ போன்ற வழக்கமான உணவுகளைத் தவிர, பயணிகள் இப்போது தோசை, உப்மா, சமோசா, பகோடா மற்றும் குலாப் ஜாமூன் உள்ளிட்ட பிற சுவையான உணவுகளையும் சுவைத்து உண்ண முடியும்.  சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களில் ஏற்கனவே இந்த மெனு வசதி இருக்கும் நிலையில் இப்போது மற்ற பயணிகள் ரயில்களுக்கும் இந்த ஆலா கார்ட் மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தானியங்களை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ராகி லட்டு, கச்சோரி, ராகி பராத்தா, தோசை, உப்மா போன்றவையும் கிடைக்கும்.

ஐஆர்சிடிசியின் இந்த மெனுவில் நீரிழிவு நோயாளிகளுக்கும் தனி முக்கியத்திவம் கொடுக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கென தனியாக சர்க்கரை இல்லாத உணவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மொத்தம் 70 உணவுகள் கொண்ட ஆலா கார்ட் மெனு தயார் செய்யப்பட்டுள்ளது.  சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டும் இருக்கும் விதத்தில் மெனு உருவாக்கப்பட்டுள்ளது.அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற வகையில் மெனு கார்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.  தென்னிந்தியாவில் இட்லி, வடை, தோசை, மகாராஷ்டிரா ரயிலிலும் பேல்பூரி, ரொட்டி மற்றும் பனீர் பகோரா அனைத்து பகுதிகளிலும் சமோசா, சௌமைன் மற்றும் மோமோஸ் ஆகியவையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் வேகவைத்த காய்கறிகள், முட்டைகளுடன், ஓட்ஸ், பால் மற்றும் கார்ன் ஃப்ளேக்ஸ் ஆகியவையும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆலா கார்ட் மெனு:

ஆலா கார்ட் மெனு என்பது பல உஅணவு வகைகளை கொண்டிருக்கும்.  அவற்றில் இருந்து நமக்கு தேவையானவற்றை தேவையான அளவில் வாங்கி உண்ணலாம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஹிண்டர்பர்க்கால் வீழ்ந்த அதானி.... அதானியால் வீழ்ந்த எல்ஐசி...!