ஹிண்டர்பர்க்கால் வீழ்ந்த அதானி.... அதானியால் வீழ்ந்த எல்ஐசி...!

ஹிண்டர்பர்க்கால் வீழ்ந்த அதானி.... அதானியால் வீழ்ந்த எல்ஐசி...!
Published on
Updated on
1 min read

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன் ஜனவரி 24, 2023 அன்று எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு ரூ.81,268 கோடியாக இருந்தது.  நேற்று அதன் மதிப்பு ரூ.33,149 கோடியாக குறைந்துள்ளது. 
 
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வருகிறது.  இந்த காலகட்டத்தில், எல்ஐசியின் முதலீட்டில் அதானி குழுமத்தின் பங்குகளால் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன் ஜனவரி 24, 2023 அன்று எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு ரூ.81,268 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் நேற்று அதன் மதிப்பு ரூ.33,149 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு எல்ஐசியில் அதானி குழுமத்தால் 127 கோடி முதலீடு செய்யப்பட்டது.   இதனால் அதன் மூலதனம் 81 ஆயிரம் கோடியை தாண்டியிருந்தது.  ஆனால், இப்போது 33,149 கோடியாக உள்ளது.  இந்த சரிவு இருந்தாலும், எல்ஐசி 3,000 கோடி லாபத்திலேயே தற்போது உள்ளது.  பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், எல்ஐசி முதலீட்டில் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக பங்குசந்தைகள் தெரிவிக்கின்றன.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சியானது கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 42.7 பில்லியன் டாலர்களில் கடுமையான வீழ்ச்சியினாலேயே ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறது.  கடந்த ஆண்டு உலகின் இரண்டாவது பணக்காரர்களின் வரிசையில் இருந்து பின்னடைவை சந்தித்த அதானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 29 வது இடத்திற்கு பின்னடைந்துள்ளார்.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com