2000 ஏழை குழந்தைகளின் தீபாவளிக்கு விளக்கேற்றிய ‘முஸ்கான்’...

சென்னையில் உள்ள ரோட்டரி கிளப், ’முஸ்கான்’ என்ற நிகழ்ச்சி மூலம், 2000 ஏழை எளிய குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினர்.
2000 ஏழை குழந்தைகளின் தீபாவளிக்கு விளக்கேற்றிய ‘முஸ்கான்’...
Published on
Updated on
1 min read

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சென்ட்ரல் எலைட்டின் தலைவர் வினய் மேத்தா ஏற்பாட்டில் முஸ்கான் எனும் நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் 2000 ஏழை எளிய குழந்தைகள் தீபாவளி பண்டிகையை வி.ஜி.பி. மனமகிழ் பூங்காவில் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

தீபங்களின் திருவிழாவான தீபாவளி ஒளியை ஏழை குழந்தைகளின் புன்சிரிப்பில் உருவாக்கிட முடிவு செய்த ரோட்டரி கிளப் ஆஃப் சென்ட்ரல் எலைட் இன் தலைவர் வினய் மேத்தா, செயலாளர் நிகுஞ்ச், பொருளாளர் சித்தார்த் ஜமாத் உள்ளிட்டோர் இந்த 'முஸ்கான்' கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் டாக்டர் N நந்தகுமார் மற்றும்  நிகழ்ச்சி தலைவர் ராகுல் பதிஜா முன்னிலையில் இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

1905 ஆம் ஆண்டு ரோட்டரி இன்டர்நேஷனல்  பால் பி ஹாரிஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. ரோட்டரி கிளப் என்பது உலகளவில் மனிதாபிமான சேவையை வழங்கும், அனைத்து தொழில்களிலும் உயர் நெறிமுறை தரவுகளை ஊக்குவிக்கும்,  நல்லெண்ணத்தையும் அமைதியையும் உருவாக்க உதவும் வணிக மற்றும் தொழில்முறை நபர்களின் ஒரு அமைப்பாகும். 1905 இல் பால் பி ஹாரிஸ் உருவாக்கிய இந்த அமைப்பு,  529 மாவட்டங்களில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com