ஒரே விலையில் பட்டாசுகள்... தீபாவளிக்கு தயாராகும் தீவுத்திடல்...

சென்னை தீவு திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசுகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே விலையில் பட்டாசுகள்... தீபாவளிக்கு தயாராகும் தீவுத்திடல்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகதீ அரசு மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பட்டாசு கண்காட்சி மற்றும் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் 144 பட்டாசு விற்பனை உரிமையாளர் சங்கம் மற்றும் வணிகர் சங்கங்களின் சார்பாக சென்னையில் உள்ள தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மொத்தமாக 46 பட்டாசு கடைகள் சீட்டுகள் மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது ஒவ்வொரு கடைகளுக்கும் இடையில் மூன்று மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் சரவெடி போல அதிரடியாக ரெய்டு நடத்திய அதிகாரிகள்...

தீவு திடல் வளாகம் முழுவதும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு கடைக்கும் முன்பாக தீயனைப்பான் மற்றும் வாலிகளில் மணல் நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக ஒரே விலையில் அனைத்து கடைகளிலும் பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது. பணிகள் நிறைவடைந்து நாளை மறுநாள் திங்கட்கிழமை இந்த கண்காட்சி மற்றும் விற்பனை கடைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ்...