மார்கழி மாத மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பா.ரஞ்சித்...

சென்னையில் நடைபெற்ற மார்கழி மாத கிராமிய இசை நிகழ்ச்சியை திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தொடங்கி வைத்தார்.
மார்கழி மாத மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பா.ரஞ்சித்...
Published on
Updated on
2 min read

சேத்துப்பட்டு, சென்னை | நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சேத்துப்பட்டுவில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று கிராமிய இசை என்ற தலைப்பில் இசை விழா நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் பா ரஞ்சித்,

மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதற்கு மக்கள் தான் உத்வேகமாக இருக்கின்றனர். மக்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்த இயலாது ஆகையினால் நன்றி. மார்கழியில் மக்கள் இசை மிக சிறப்பு மிக்க ஒன்றான இது, கடும் நெருக்கடியில் தொடங்கியது இந்நிகழ்ச்சி.

என தெரிவித்தார். மேலும், மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் நண்பர்கள் மக்கள் அனைவரையும் அழைத்து வந்து சிறப்பாற்ற வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளையும் கலைஞர்களையும் இந்த மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளோம் என குறிப்பிட்டார்.

இரண்டு நாட்கள் முன்பு மட்டுமே அறிவித்தும் பின் ஜி வி பிரகாஷ் நிகழ்ச்சிக்கு வருகை தந்ததற்கு மிக நன்றி என தெரிவித்த பா. ரஞ்சித், மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி நடத்துவதின் நோக்கமானது கலை மக்களுக்கானது மக்களுக்கான கலையை மேடை ஏற்றி மக்களிடமே திருப்பி கொண்டு சேருவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவித்திருந்தார்.

பிறகு பேசிய ஜி வி பிரகாஷ்,

நம்முடைய  கலாச்சார இசையும் கலாச்சார ஆடல் பாடல்களையும் பேணிக் காத்திட எவ்வளவு உதவி அளிக்குமா நமது கலாச்சாரம் நீடித்து நிற்கும். கடந்த வருடம் இந்த வருடம் மற்றும் அனைத்து வருடங்களும் இந்த நிகழ்ச்சிக்கு தான் வருகை அளிப்பேன். பல்வேறு கலைஞர்களுக்கு தங்கள் கலைவினை உலகத்துக்கு எடுத்துக்காட்டிட இந்த மேடை வாய்ப்பு அளிக்கிறது.

என கூறினார். முன்னதாக நடைபெற்ற கிராமிய நிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com