காதலனைக் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!!!

காதலனைக் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!!!

சமீபத்தில், ஒரு ஊடக உரையாடலின் போது, ​​ஸ்ருதி சாந்தனுவிடம் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
Published on

ஸ்ருதிஹாசன் அடிக்கடி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பவர்.  அவர் அடிக்கடி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விவாதிப்பார்.  ஸ்ருதிஹாசன் சாந்தனுவுடன்  கடந்த மூன்று வருடங்களாக உறவில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.  

இருவரின் ஜோடியையும் ரசிகர்கள் மிகவும் புகழ்ந்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் அவர் போடும் பதிவுகள் எப்போதும் வைரலாகி வந்தது. ஸ்ருதி சாந்தனுவை பலமுறை பாராட்டியுள்ளார்.  சாந்தனு தன் வாழ்க்கையில் வந்த பிறகு தான் நிறைய மாறிவிட்டதாக ஸ்ருதி கூறியுள்ளார்.

சமீபத்தில், ஒரு ஊடக உரையாடலின் போது, ​​ஸ்ருதி சாந்தனுவில் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.  தானும் சாந்தனுவும் சிறந்த நண்பர்கள் என்றும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.  சாந்தனுவைப் பற்றிமேலும் கூறுகையில், அவர் மிகவும் அன்பானவர் எனவும் அமைதியானவர் எனவும் அவரை மிகவும் புரிந்துகொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.  

சாந்தனுவைப் போல இருக்க விரும்புவதாகவும் அவரை போல இருக்க அவரிடம் கற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். சாந்தனுவிற்குள் இதுபோன்ற பல குணங்கள் இருப்பதாகவும், அதை தான் விரும்பி ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com