தேனி | பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் திரவியம் கலை அறிவியல் கல்லூரி நிறுவனங்களுக்கு சொந்தமான செவிலியர் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் செவிலியர் மாணவி லட்சிதா இன்று காலை விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார். தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் காயம் அடைந்த மாணவியை, அங்கிருந்த விடுதி பணியாளர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக பெரியகுளம் வட்டாட்சியர் காஜா செரீப் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மகள் ரக்சிதா(19) எனத் தெரியவந்ததுள்ளது.
மேலும் படிக்க | மானத்துக்காக பெற்ற மகளையே கொலை செய்த கொடூர தாய்...
மேலும் மாணவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில் மாணவியின் பெற்றோர், வரும் சனிக்கிழமை வந்து அழைத்துச் செல்வதாக கூறியதைத் தொடர்ந்து மாணவி மணமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கஞ்சா கடத்தி 4 பேர் கைது... நெல்லையில் பரபரப்பு...
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவியிடம் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். எனவே மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்ததை தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.