மானத்துக்காக பெற்ற மகளையே கொலை செய்த கொடூர தாய்...

காதலை கைவிட மறுத்ததால் மகளை கழுத்தை நெரித்துக்கொன்ற தாய் விஷம் குடித்து தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மானத்துக்காக பெற்ற மகளையே கொலை செய்த கொடூர தாய்...

திருநெல்வேலி | தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார்.

சமீபத்தில் அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று நள்ளிரவு அக்கம்பக்கத்தினர் பேச்சியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அருணா மயங்கி கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார்.

மேலும் படிக்க | கஞ்சா கடத்தி 4 பேர் கைது... நெல்லையில் பரபரப்பு...

உடனே அவர்கள் 2 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர். அதில் அருணா கல்லூரியில் படித்தபோது இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது..

மேலும் படிக்க | தூக்கு தண்டனையில் இருந்து தப்ப பலே நாடகம்..! அலேக்காக தூக்கிய காவல்துறை..!

இந்த நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அருணாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அருணா சம்மதம் தெரிவிக்காததால் ஆறுமுககனி தனது மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்  என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்க | மர்ம மரணத்திற்கு பின்னணியில் மூன்று காதலா? அம்பத்தூர் கொலைக்கு காரணம் இதுதானா?