சென்னை : கிண்டி மடுவின்கரை முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார். 36 வயதான இவர் அந்த பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் செல்வி என்பவருக்கும் இடையே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்திருந்தது.
இரண்டு குழந்தைகளைப் பெற்ற இந்த தம்பதிக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கணவனால் நாள்தோறும் துன்புறுத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து வேறு ஒரு இளைஞரைக் காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் செல்வி.
மனைவி ஓடிப்போனதை தாங்க முடியாத செல்வக்குமார், வேறு வழியின்றி மனைவியின் தம்பி நாகராஜ் என்பவருடனேயே தங்கி வந்துள்ளார். நாரவாரி குப்பம் வைத்தீஸ்வரன் தெருவில் செல்வகுமாரும், நாகராஜூம் வசித்து வந்த நிலையில் அவ்வப்போது இருவரும் இணைந்து மதுஅருந்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் செங்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓடோடி வந்துள்ளான் செல்வகுமார். தானும் தனது மச்சான் நாகராஜூம் வீட்டில் இருந்த சமயத்தில் யாரோ சில மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அரிவாள்மனையைக் கொண்டு நாகராஜை கொலை செய்ததாகவும் பதறியடித்தபடியே கூறினான் செல்வகுமார்.
மேலும் படிக்க | கொள்ளை கும்பல் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த 10 வயது சிறுமி...
செல்வகுமாரை அமர வைத்து விசாரணைத் தொடங்கிய போலீசாருக்கு சில சந்தேகங்கள் எழுந்தது. இதையடுத்து காவல்துறையினரால் சிறப்பாக கவனிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த உண்மைகளை கக்கினான் செல்வகுமார். புதன்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வழக்கம் போல மாமன் மச்சான் இருவரும் மதுஅருந்தினர்.
அப்போது, போதையில் மிதந்த செல்வக்குமார், பிரிந்து போன மனைவி செல்வியைப் பற்றி பேச்சைத் தொடங்கியிருக்கிறார். உன் அக்காவை ராணி போல வைத்திருந்தேன்.. ஆனால் இப்படி எவனையோ இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என ஆபாசமாக பேசியிருக்கிறார் செல்வகுமார்.
மேலும் படிக்க | காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி...! தீர்ப்பளித்த சென்னை அமர்வு நீதிமன்றம்...!
தனது சகோதரியைப் பற்றி தன்னிடமே அசிங்கமாக பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாத நாகராஜ், செல்வகுமாரிடம் முறையிட்டார். அப்போது இருவரும் போதையில் இருந்ததால் ஒருவருக்கொருவர் திட்டித் தீர்த்ததோடு கைகலப்பும் உண்டாகியிருக்கிறது.
இதையடுத்து மனைவியின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த செல்வகுமார், மச்சான் நாகராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். அதோடு, அருகில் கிடந்த அரிவாள்மனையை எடுத்து நாகராஜின் கழுத்தை கரகரவென அறுத்துத் தள்ளினார் செல்வகுமார். மச்சான் நாகராஜ் கண் முன்னேயே துடிதுடித்து இறந்து இறந்து போனார்.
தன்னை விட்டு பிரிந்து சென்றார் என்ற ஒரே காரணத்தினால் மனைவியின் மீதுள்ள ஒட்டு மொத்த வன்மத்தையும் மச்சான் மீது இறக்கிய செல்வக்குமார் சிறைக்குள் கம்பி எண்ணும் வேலையைத் தொடங்கியதாக சேதி..