கேரளா : கொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் 36 வயதான காவ்யா என்ற பெண். வழக்கம்போல தனது ஸ்கூட்டரில் வேலைக்கு செல்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தபோது , திற்பூணித்தற பகுதியில் வைத்து அதிவேகத்தில் வந்த பைக் ஒன்று, ஸ்கூட்டரை முந்தி சென்று- அதே வேகத்தில் திடீர் என திரும்பி உள்ளது.
இதில் காவியா ஓட்டி சென்ற ஸ்கூட்டர் அந்த பைக்கின் பின்பகுதியில் மோதியதில் நிலை தடுமாறிய ஸ்கூட்டர் சாலையில் விழுந்துள்ளது.அதே நேரத்தில் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று காவியா மீது ஏறி இறங்கியுள்ளது.
மேலும் படிக்க | சேதமடைந்த சாலை...! திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...!
இதையடுத்து பேருந்து ஓட்டுனர் உட்பட அப்பகுதி பொதுமக்கள் காவ்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயலும் போது வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த பைக்கை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பியும் ஓடியுள்ளார்.
மேலும் இது குறித்து கொச்சி போலீஸசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்த நிலையில் பேருந்தின் முன் பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி யில் இந்த விபத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.