பச்சை நிறத்தில் கடல்... கரை ஒதுங்கிய இறந்த ஆமை...

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடல் பகுதியில் திடிரெனெ கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்து கடல் வாழ் உயிரினமான ஆமை உயிரிழந்து கரை ஒதுங்கியதால் மீனவர் அச்சமடைந்தனர்.
பச்சை நிறத்தில் கடல்... கரை ஒதுங்கிய இறந்த ஆமை...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி |  கடல் நிலப்பரப்பை அதிகம் கொண்ட பகுதிகளில் ஒன்றானது இங்கு மீன்பிடி தொழிலை நம்பி இருக்கக் கூடியவர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடல் பகுதி திடீரெனெ பச்சை நிறத்தில் காட்சியளித்தது மட்டுமின்றி, அலைகள் ஆக்ரோசமாக வீசியது.

இதனால் கடல் உயிரினமான ஆமை உயிரிழந்து கரை ஒதுங்கின. இதனை கண்ட அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அச்சமடைந்துள்ளனர்.

இந்த கடல் பகுதியில் சிறிது நாட்களுக்கு முன்பு இதை போல் கடல் பகுதி பச்சை நிறத்தில் காட்சியளித்த நிலையில், அதை போல் மீண்டும் பச்சை நிறத்தில் காட்சியளித்திருப்பது மீனவர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகள் கடல் பச்சை நிறத்தில் அவ்வப்போது காட்சியளிப்பதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து மீனவர்களிடம் விளக்கிக் கூற வேண்டும் என்று மீனவர்கள் தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com