ஆன்லைன் வியாபாரத்தால் ரூ. 9 லட்சம் இழந்த சர்க்கரை வியாபாரி...

வடஇந்திய வியாபாரியால் ஏமாற்றப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், ஆன்லைன் வர்த்தகத்தில் 9 லட்சம் ரூபாயை இழந்து தவிக்கிறார்.

ஆன்லைன் வியாபாரத்தால்  ரூ. 9 லட்சம் இழந்த சர்க்கரை வியாபாரி...

சேலம் | ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையிலும் ஏமாற்றுபவர்களுக்கு காலம் உண்டு என அடிக்கடி சொல்லிக் கேட்பதுண்டு. ஆனால் ஏமாற்றுபவர்களை அடையாளம் காணத் தெரியாமல்தான் இங்கு பலரும் திணறியும் வருகின்றனர். இன்னும் சிலர் வெறும்நீரிலேயே வெண்ணெய் எடுப்பவர்களைக் கூட  மொட்டை போட்டு அதில் பூவும் சூடிக் கொள்வதுண்டு. இவ்வாறு வடஇந்திய வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டவர்கள்தான் இவர்கள்.. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். 21 வயதான இவர் தந்தை வெங்கடாச்சலம் நடத்தி வந்த சர்க்கரை ஆலையை தற்போது நிர்வகித்து வருகிறார். ஓமலூர் பகுதியில் சர்க்கரை வியாபாரத்தை பெரியளவில் செய்து வந்த மோகன்குமார், பொதுவாக வெளிமாவட்டங்களில்தான் சர்க்கரையை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.. 

மேலும் படிக்க | தூத்துக்குடி : கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் ...போலீசார் விசாரணை

ஆனால் தற்போது ஆன்லைன் முறையை அறிந்து வைத்திருந்த மோகன்குமார், கணினியை கடவுளாக நினைத்து தேடலில் இறங்கினார். அப்போது மராட்டியத்தைச் சேர்ந்த சர்க்கரை வியாபாரி ஒருவரின் அறிமுகம் மோகன்குமாருக்கு கிடைத்திருக்கிறது. 

மகாலட்சுமி என்பவர்தான் அந்நிறுவனத்தை நடத்தி வந்தவர் என்பதால் அவரது ஆசை வார்த்தையில் விழுந்துள்ளார் மோகன்குமார். குறைந்த விலைவில் தரமான சர்க்கரை கிடைக்கும் என வியாபார தந்திரத்தோடு மகாலட்சுமி இனிக்க இனிக்க பேசியதால் தித்திப்பில் கவிழ்ந்து போனார் உள்ளூர் முதலாளி. 

மேலும் படிக்க | புதுச்சேரி : பிரபல ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்...கொலைக்கு உடந்தையான திருநங்கை...

இதையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 25 டன் சர்க்கரையை கொள்முதல் செய்தவர் அதற்கு 7,82,250 ரூபாயை ஆன்லைனிலேயே கட்டியிருக்கிறார். ஆனால் மராட்டியத்தில் 25 டன்னுக்கு பதிலாக வெறும் 20 டன் சர்க்கரையே மோகன்குமாரின் ஆலைக்கு வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் மோகன். 

ஏன் 5 டன் சர்க்கரையை குறைத்து அனுப்புகிறீர்கள் என கேட்டதற்கு, அடுத்த முறை சேர்த்து அனுப்புதாய் கூறியிருக்கிறார் மற்றொருவர். மகாலட்சுமியின் இனிப்பான குரலைக் கேட்டவருக்கு கரகர ஆண் குரலைக் கேட்டு சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் இரண்டாம் முறை அதே போல 25 டன் சர்க்கரை ஆர்டர் செய்தவருக்கு மொத்தமாய் போட்டார் பட்டை நாமம்.. 

மேலும் படிக்க | மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணால் பரபரப்பு...

30 டன் சர்க்கரையை அனுப்பாமல் கிட்டத்தட்ட 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மோசடி செய்தது அந்த வடஇந்திய நிறுவனம். முன்பின் தெரியாத ஆன்லைன் வியாபாரிகளை நம்பி லட்சக்கணக்கில் மோசம் போனதையடுத்து காவல்நிலையத்தையே தஞ்சம் என தேடி வந்திருக்கிறார் இளம்முதலாளி மோகன்குமார். தன்னை லட்சக்கணக்கில் ஏமாற்றிய சர்க்கரை மொத்த வியாபாரி மகாலட்சுமி, அவரது கணவர் கவுரவ் மற்றும் லாரி டிரைவர் ஸ்ரேயாஸ் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார் மோகன்குமார். 

ஆன்லைனில் ஆர்டர் செய்தால், செல்போனுக்கு பதிலாக செங்கலும், லேப்டாப்புக்கு பதிலாக வெற்று அட்டையும் அளித்து பலர் ஏமாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில் எங்கோ உள்ள ஆலையை நம்பி லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டு கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்.. என்பதுதான் சர்க்கரை வியாபாரியின் புலம்பலாக உள்ளது..

மேலும் படிக்க | "லீவு தர்லைன்னா கொலையா என்ன கொடும சார் இது"!!! பட்ட பகலில் வாலிபர் வெட்டிக் கொலை, போலீசார் விசாரணை...