"லீவு தர்லைன்னா கொலையா என்ன கொடும சார் இது"!!! பட்ட பகலில் வாலிபர் வெட்டிக் கொலை, போலீசார் விசாரணை...

"லீவு தர்லைன்னா கொலையா என்ன கொடும சார் இது"!!! பட்ட பகலில் வாலிபர் வெட்டிக் கொலை, போலீசார் விசாரணை...
Published on
Updated on
2 min read

சென்னையில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவரை துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை :

சென்னை : வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (30). இவருக்கு திருமணமாகி தேவ பிரியா என்ற மனைவியும் 1½ வயதில் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவர் அயனாவரம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இண்டெர்நெட் சேவை (ஹாத்வே) நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.அவரது மனைவி தேவ பிரியா எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இன்று மனைவியை அலுவலகத்தில் இறக்கிவிட்டு பணிக்கு வந்த விவேக்கிடம் அவர் பணியாற்றும் அலுவலகத்தில் உள்ள வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த வாலிபர் திடீரென கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க விவேக் ஓடி வந்த போதும் விடாமல் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து அருகிலிருந்த பொதுமக்கள் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் உடனே திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது கொலை செய்துவிட்டு மாடி வழியாக தப்பி ஓடிய கொலையாளியை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.அதன் பிறகு  போலீசார் கொலை செய்யப்பட்ட விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

துடிக்க துடிக்க வெட்னத்துக்கு இதான் காரணமா :

போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்த அந்த நபர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பது தெரியவந்துள்ளது.இவர் நான்கு மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் இந்த அலுவலகத்தில் பணியாற்றி வருவதும்,கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தோஷ் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என விவேக்கிடம் தெரிவித்த போது, பணி முடிக்காமல் வேலைக்கு செல்ல வேண்டாம் என  சந்தோசை விவேக் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இதை மனதில் வைத்து கொண்ட சந்தோஷ் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த போது விவேக்கிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த சந்தோஷ் தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து விவேக்கின் கழுத்தில் குத்திவிட்டு,ஓட ஓட விரட்டி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.சந்தோஷ் கஞ்சா மற்றும் போதை மாத்திரைக்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்தது.முன் விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற அடிப்படையில் எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை சம்பவத்தை சந்தோஷ் மட்டும் நிகழ்த்தியுள்ளாரா அல்லது வேறு நபர்கள் உதவி செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை நடந்த இடமான எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவன அலுவலக வளாகத்தில் கொலை செய்யப்பட்ட விவேக்கின் மனைவி,சகோதரிகள் மற்றும் குடும்பத்தார் கூடி கதறி அழுது கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கூறி கூச்சலிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com