
துருக்கியில் நடந்த நிலநடுக்கம் காரணமாக பல ஆயிரம் உயிர்கள் பலியாகின. அதில், ஒரு திருமணமான் அஜோடி மட்டும் தங்களது கைகளைக் கோர்த்த படியாக, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஃப்லோர்டாவின் ஒர்லாண்டோ பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் அவரது மனைவி வெரோனிக்கா இல்கின், தங்களது தேனிலசைக் கொண்டாட, துருக்கியில் உள்ள இஸ்கெண்டெருன் என்ற இடத்திற்கு வந்துள்ளனர்.
குறிப்பாக ஐ.வி.எஃப் அதாவது கருத்தரித்தலுக்காக வந்து தங்களது குடும்பத்தை பெரிதாக்கும் கனவோடு வந்த இந்த ஜோடிக்கு வரப்போகும் துயரம் தெரியாமல் போனது.
சுமார் 7.8 அளவிற்கு வந்த நிலநடுக்கத்தால், தாங்கள் தங்கி இருந்த வீட்டிலேயே கட்டிலுக்கு அடியில் கைகளைப் பிடித்தப்படியே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதமே இங்கு வந்த நிலையில், இந்த ஜோடியில் இறப்பு உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இறக்கும் தருவாயிலும் தங்களது கைகளைக் கோர்த்தப்படியே மீட்கப்பட்ட கதை காதலர்களுக்கு கண்களில் கண்ணீரைக் கொடுத்துள்ளது.
மனதை குலைக்கும் இந்த நிலநடுக்கமானது, கிட்டத்தட்ட 24,921 கட்டிடங்களை குலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.