துருக்கியில் பலியான இந்தியர்.... உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுமா?!!

துருக்கியில் பலியான இந்தியர்.... உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுமா?!!

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டா் அளவுகோலில் 7 புள்ளி 8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின.  சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிடங்களில் குடியிருப்புகள் உள்பட பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. 

தற்காலிக குடியிருப்புகள்:

இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு தற்காலிக முகாம்கள், மருத்துவ முகாம்களை அமைத்து அவர்களை தங்க வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பலி எண்ணிக்கை:

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து உள்ளது. 

இந்தியர்:

இந்நிலையில், துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உத்தரகாண்ட் மாநிலம் கோட்வார் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் கவுட் என்பவர் உயிரிழந்தார்.  அவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊரான உத்தரகாண்ட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:  குறுந்தகவலால் இலட்சங்களை இழந்த பெண்....