குறுந்தகவலால் இலட்சங்களை இழந்த பெண்.... 

குறுந்தகவலால் இலட்சங்களை இழந்த பெண்.... 
Published on
Updated on
1 min read

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தேனியைச் சேர்ந்த பெண்ணிடம் 7 லட்சம் மோசடி வட மாநிலத்தைச் சேர்ந்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறுந்தகவல்:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கீழ சொக்கநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமூக வலைதளம் மூலம் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் கூறி குறுந்தகவல் வந்துள்ளது.

மகள் தகுதியானவர்:

அதில் குறிப்பிட்டுள்ள தொடர்பு எண்ணில் அந்தப் பெண் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  அதில் விமான நிலையங்களில் உடனடி ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது உங்கள் பகுதியில் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் என மீனுக்கு வலை விரித்தது போன்று பேச்சில் வலை விரித்த வட மாநில கொள்ளையர்களை நம்பி அந்தப் பெண் தனது மகள் அந்த வேலைக்கு தகுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக:

இதனைப் பயன்படுத்தி  வட மாநில கொள்ளையன் ஐந்து வங்கி கணக்கு மூலம் தொடர்ச்சியாக சுமார் 7.18லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.

சைபர் க்ரைமில்:

மீண்டும் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணிடம் பணம் கேட்கவே சந்தேகம் அடைந்த அந்தப் பெண் தான் ஏமாறுவதை உணர்ந்து தேனி சைபர் கிரைம் காவல்துறையிடம் கடந்த ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி புகார் அளித்தார்.

கொள்ளையர்கள் கைது:

இதைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக புலன் விசாரணையில் ஈடுபட்ட தேனி சைபர் கிரைம் காவல்துறையினர்  சமூக வலைதள கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் நன்றாக திட்டமிட்டு டெல்லியில் வைத்து ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர்.

சிறையிலடைப்பு:

கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் தேனி கொண்டு வந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

குவியும் பாராட்டுகள்:

சமூக வலைதளத்தில் வந்த சிறிய தகவலை நம்பி சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பறி கொடுத்த பெண்ணின் புகாரினை அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் ஆறு மாத காலத்தில் துரித விசாரணையில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்த தேனி சைபர் கிரைம் காவல்துறையினரை தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com