கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள்... மீட்கப்படுமா?!!

சுரங்க விரிவாக்க பணிக்காக 25 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி மக்கள் விரோத போக்கை கண்டித்தும், என்எல்சி நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தார குப்பத்தில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செழிப்பாக உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையப்படுத்தும் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்துகொண்டோர்:
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ் முன் அன்சாரி தலைமை தாங்கினார் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜு மற்றும் என்எல்சி சுரங்க விவாக்கத்தில் பாதிக்கப்பட்ட பல சங்கங்கள் சார்பில் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா.....