ஆஸ்காரில் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற ‘நாட்டு நாட்டு’...

அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்காரில் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற ‘நாட்டு நாட்டு’...
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை 2023-ம் ஆண்டுக்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு' பாடல் மூலப்பாடல் வகையிலும், ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தியா சார்பில் இத்தனை படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும்,  "நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும், பாடகர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச், கால பைரவா ஆகியோரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் இந்தப் பாடலை இசைக்க உள்ளனர்.

விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு விருதை வழங்க உள்ளார்.

ஆர்ஆர்ஆர் பட நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் விழாவில் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது விழா இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com