ஆஸ்கருக்கு முன் அமெரிக்காவின் 200 தியேட்டர்களில் வெளியாக இருக்கும் ‘RRR'

அமெரிக்காவின் 200 தியேடர்களில் எஸ்.எஸ் ராஜமௌளியின் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கருக்கு முன் அமெரிக்காவின் 200 தியேட்டர்களில் வெளியாக இருக்கும் ‘RRR'

உலகளவில் இந்திய சினிமாவைக் கொண்டு சென்று பல தரப்பினரிடௌம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற ஆர்.ஆர்.ஆர் படம் தற்போது சினிமா உலகின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த ஆர்.ஆர்.ஆர் படம், உலகளவில் நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் படிக்க | செல்ஃபீ எடுத்தே சாதனை படைத்த அக்‌ஷய் குமார்!

இந்நிலையில், சமீபத்தில் நடந்த கோல்டன் க்ளோப் அகடெமி விருதுகளில் ‘நாட்டு நாட்டு’  பாடல், சிறந்த ஒரிஜினல் விருது பெற்று இந்தியர்களுக்கே பெருமை சேர்த்தது. மேலும், மக்கள் மீண்டும் அந்த் அபடத்தை தியேட்டரில் பார்க்க விரும்புவதாக கோரிகக்கைகள் விடுக்கப்பட்டதை அடுத்து, தற்போது அமெரிக்காவின் 200 தியேட்டர்களில் இந்த படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | அறிமுக நாயகன் இஷான் நடிப்பில் ‘அரியவன்’... ட்ரைலர் வெளியீடு!!!

ஆஸ்கார் விருது விழாவை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் வேரியன்ஸ் ஃபிலிமா மற்றும் சரிகாமா சினிமாஸ் வழியாக 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

சமீபத்தில், RRR இன் விநியோகஸ்தர், நாட்டு நாட்டு கிளிப்களை ட்விட்டர் தடுப்பதாக குற்றம் சாட்டினார். ஏன் என்றால், ட்விட்டர் விளம்பரங்களில் தெலுங்கு ட்விட்டரின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாக இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரப் போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்ற RRR , 1920களில் ஒரு கற்பனைக் கதையை விவரிக்கிறது. ஆஸ்கார் 2023 மார்ச் 12 அன்று நடைபெற உள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைப்புயல் ரஹ்மான்!!