செல்ஃபீ எடுத்தே சாதனை படைத்த அக்‌ஷய் குமார்!

செல்ஃபீ படத்தின் ப்ரொமோஷனுக்காக 3 நிமிடங்களில் அதிக அளவு செல்ஃபி எடுத்ததாக அச்க்‌ஷய் குமார் சாதனை படைத்துள்ளார்.

செல்ஃபீ எடுத்தே சாதனை படைத்த அக்‌ஷய் குமார்!

பாலிவுட் படங்களுக்கான ப்ரொமோஷன்கள் எப்போதும் வித்தியாசமாக தான் இருக்கும். அதிலும், ‘கான்’-களின் படங்களும், கப்பூர் படங்களும் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘அக்‌ஷய் குமார்’ சமீபத்தில் நடித்து வெளியாஅக் இருக்கும் படம் ‘செல்ஃபீ’.

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற, டிரைவிங் லைசன்ஸ் என்ற படத்தின் இந்தி ஆக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக கின்னஸ் உலக சாதனையையே படைத்திருக்கிறார் அக்‌ஷய்.

மேலும் படிக்க | அறிமுக நாயகன் இஷான் நடிப்பில் ‘அரியவன்’... ட்ரைலர் வெளியீடு!!!

கைகளில் வணக்கம் கூறியவாறு வெறும் 3 நிமிடங்களிலேயே சுமார் 184 செல்ஃபீகளை எடுத்துள்ளார் அக்‌ஷய். வலது பக்கம் இடது பக்கம் என இரு புறமும் திரும்பி திரும்பி செல்ஃபீக்களை எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் தன்னுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்ட ரசிகர்களுக்காக மனதை உருக்கும் ஒரு நன்றி கடிதத்தையும் அக்‌ஷய் எழுதினார். அதில், தனது அன்பார்ந்த ரசிகர்களுக்கு தான் தரும் ஒரு பரிசு என இந்த விசித்திரமான மற்றும் வித்தியாசமான ஸ்டண்டை செய்ததுக்குக் காரணமாக கூறினார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைப்புயல் ரஹ்மான்!!

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)