ஆஸ்கர் குழுவுடன் லஞ்ச் சாப்பிட்ட “கீரவாணி”...

95-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளவர்களுக்கான மதிய விருந்தில் இந்தியா சார்பில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி கலந்து கொண்டார்.
ஆஸ்கர் குழுவுடன் லஞ்ச் சாப்பிட்ட “கீரவாணி”...
Published on
Updated on
1 min read

95வது ஆஸ்கார் விருதுகள் வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ள டாலி தியேட்டரில் நடைபெறவுள்ள நிலையில், இந்த நாள் ஹாலிவுட்டின் மிகப்பெரிய நாளாகக் கருதப்படுகிறது. இதனையொட்டி 95-வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளவர்களுக்காக ஒரு மதிய உணவு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கீரவாணி, தயாரிப்பாளர் குனீட் மோங்கா, இயக்குநர் ஷௌனக் சென் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்தோடு பல முறை ஆஸ்கர் விருது பெற்றவர்களும், பலமுறை பரிந்துரைக்கப்பட்டவர்களும், முதல் முறை பரிந்துரைக்கப்பட்டவர்களும் கலந்து கொண்டனர். பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com