பைக் சாகசம் விபத்தில் முடிந்த பரிதாபம்...

இளைஞர்கள் நடத்திய பைக் சாகசம் விபத்தில் முடிந்ததால் இளைஞர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருவதால் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பைக் சாகசம் விபத்தில் முடிந்த பரிதாபம்...

கர்நாடகா | விஜயநகர் மாவட்டம் ஹொஸ்பேட் தாலுக்கா சிட்டவாடிகி என்ற பகுதியில் இளைஞர் பலர் சில இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சாகசம் செய்தவாறு பயணித்து கொண்டிருந்தனர். அதை முன்னாள் சென்ற ஒருவர் தனது செல் போனில் படம் பிடித்தவாறு சென்று கொண்டிருந்தார்.

புல்லட் வாகனத்தில் சென்று கொண்டிருந்த மல்லிகார்ஜுன் மற்றும் விருபாக்சா என்ற இரு இளைஞர்கள் அனைவரின் வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்த போது சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது வாகனம் மீது விபத்தை சந்தித்தார்.

மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பால் வேன்...

இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த இளைஞன் வானத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். சினிமா படலத்தில் சண்டை காட்சியில் நபர்கள் தூக்கி வீசப்படும் காட்சியை போல் இந்த விபத்தில் சிக்கிய இளைஞர் தூக்கி வீசப்பட்டார்.

விபத்தில் சிக்கிய இருவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர். இந்த விபத்து காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து....பயணிகள் நிலை?!!!