தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பால் வேன்...

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பால் வேன் திடீரென தீப்பிடி எரிந்து சேதம் அடைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பால் வேன்...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பொறியியல் கல்லூரி அருகே திருச்சியில் இருந்து பாலை இறக்கிவிட்டு, ஃப்ரீசர் (குளிர்சாதன) வசதியுடன் இர்ந்த பால் வண்டி சென்னை நோக்கி சென்றது.

கோவர்த்தனா என்ற தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் திருச்சியில் பாலை இறக்கிவிட்டு சென்னைக்கு காலியாக சென்றபோது சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகே சென்றுள்ளர்.

அந்நேரம், திடீரென குளிர்சாதன பெட்டி உள்ள பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்த போதிலும் வண்டி பெரும்பாலான பகுதி எரிந்து சேதம் அடைந்தது.

பால் வாகனத்தில் ஏசியில் ஏற்பட்ட தீ காரணமாக வாகனம் முழுமையாக தீப்பற்றி எழுந்துள்ளது தேசிய நெடுஞ்சாலையில் பால் வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com