தேயிலை தொழிலாளர்களின் வீடுகளில் தீ விபத்து...

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஆறு வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தேயிலை தொழிலாளர்களின் வீடுகளில் தீ விபத்து...

கோவை | வால்பாறை பகுதியில் 62 ஸ்டேட்டுகள் உள்ளன எஸ்டேடுகளில் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் வீடு கட்டி அதில் தாங்கி வேலை செய்து வருகின்றனர்.

எஸ்டேட் நிர்வாகத்தின் வீடுகள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட்  முதல் பிரிவு தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் ஆறு வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம் ஆகியது.

மேலும் படிக்க | கார் மோதி கல்லூரி மாணவன் படுகாயம்... நிற்காமல் போனதால் பெரும் பரபரப்பு...

இன்று காலை 8 மணி அளவில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கும் சென்று உள்ளனர். அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த மக்கள்  எஸ்டேட் நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தனர்.

பின் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.ஒரு வீட்டில் பிடித்த தீ வேகமாக அருகில் இருந்த 6 வீடுகளுக்கு பரவியது. எஸ்டேட் தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

தொழில்லர்கள்  தயாநிதி, ஆரோக்கியமேரி, அண்ணமமால், உஷா, தேவி, வேலம்மாள், ஆகியோர் வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது வீட்டில் இருந்த டிவி சமையல் பொருட்கள் கட்டில் துணிமணி நகைகள் போன்ற அனைத்து பொருட்களும் சேதம் ஆகியது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் ஜேசிபி கவிந்து ஒருவர் உயிரிழப்பு...

வீட்டில் அப்பொழுது யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர், காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து மின்சார கசிவுனால்  தீ ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

தீயினால் ஏற்பட சேதம் சுமார் பத்து லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று விசாரணையில் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் விபத்து...திட்டமிடப்பட்ட சதியா?!!