பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து....பயணிகள் நிலை?!!!

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து....பயணிகள் நிலை?!!!

தமிழ்நாட்டின் சிறுமலை மலைப்பகுதியில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தமிழ்நாட்டின் பகுதியான சிறுமலைக்கு அரசுப் பேருந்து சென்றபோது பேருந்து கவிழ்ந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.  இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.  சிறுமலைப் பகுதியின் 18வது திருப்பத்தில் செல்லும் போது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது.  

விபத்திற்கு காரணமாக மோசமான வானிலைக் கூறப்பட்டுள்ளது.  பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.  காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அம்மா சிமெண்ட் வினியோகத்தில் முறைகேடு.... மூன்று வாரம் கால அவகாசம்....