“மஞ்சப்பைய எடுத்துச் செல்ல வெட்கப்பட வேணாம்!”... சிறுவர்களின் வைரல் வீடியோ...

ப்ளாஸ்டிக் பயண்பாடு அதிகரித்துள்ள நிலையில் அது குறித்த விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட மாணவர்களின் வீடியோ படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

“மஞ்சப்பைய எடுத்துச் செல்ல வெட்கப்பட வேணாம்!”... சிறுவர்களின் வைரல் வீடியோ...

புதுக்கோட்டை : தீபாவளி பண்டிகையையொட்டி வழக்கத்தை விட அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தள்ளது மனவேதனையை ஏற்படுத்தி உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வறுத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் களபம் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இருவர் பிளாஸ்டிக்கால் வரும் தீமைகள் குறித்தும் மஞ்சள் பை எடுத்துச் செல்வதற்கு வெட்கப்படக் கூடாது என்று கூறி பாடல் பாடி வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | நவம்பர் 11ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை...! என்ன காரணம்..?

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு மீண்டும் மஞ்சள் பை திட்டம் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிளாஸ்டிக் பயன்பாடு சற்று குறைந்தது. மேலும் ஒன்றிய அரசும் கடந்த ஜூலை மாதம் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்தது.

இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகம் முழுவதும் மலை போல் குவிந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது மன வேதனையை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | தீபாவளி சிறப்பு பேருந்து மூலம் ரூ.9கோடி வருமானம்.. சென்னை திரும்ப 13,150 பேருந்துகள் இயக்கம்..!

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் கிராமத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர் இளவரசன் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த எ.மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் முத்துச்செல்வன் மற்றும் உருமராஜா ஆகிய இரண்டு மாணவர்கள் தாளம் இசைத்து விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளனர். அதில்,

“பிளாஸ்டிக் பொருட்கள் மண் வளத்தை கெடுப்பது மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவிக்கிறது. மஞ்சள் பை எடுத்துச் செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது! பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மக்காமல் மண்ணின் தன்மையை கெடுத்து விடும்... அதனால் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும்”

என்று கூறி பாடல் பாடி வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | புதுத் துணி வாங்கித் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை...