நவம்பர் 11ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை...! என்ன காரணம்..?

நவம்பர் 11ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை...! என்ன காரணம்..?

பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக நவம்பர் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு 35- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளால், 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, அன்றைய தினத்தில் பிரதமர் மோடி, தமிழகம் வருகைப்புரிந்து, மாணவர்களுக்கு பட்டன்களை வழங்கி, சிறப்புரையாற்றவுள்ளார். 

இதனைத்தொடர்ந்து சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : தீபாவளி சிறப்பு பேருந்து மூலம் ரூ.9கோடி வருமானம்.. சென்னை திரும்ப 13,150 பேருந்துகள் இயக்கம்..!


.