புதுத் துணி வாங்கித் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை...

புதுத் துணி வாங்கித் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை...

தீபாவளி பண்டிகைக்கு புதுத்துணி வாங்கித் தராத காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கிருஷ்ணகிரி : தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா, இவரது மகன் சிவக்குமார் (19) இவர் நர்சரி பண்ணையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள சிவக்குமார், கடந்த சில நாட்களாக மது அருந்தி விட்டு சரியாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி தர வேண்டும் என சிவக்குமார் தனது தந்தை ஸ்ரீராமப்பாவிடம்  கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீராமப்பாவோ கடன் வாங்கித்தான் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருவதாக கூறி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவக்குமார் தனது வீட்டில் குளியல் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி கொடுக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com