காதலனைக் கூட நம்பமுடியவில்லை... சிறுமிக்கு கொடுமை செய்த கயவர்கள் கைது...

17 வயது சிறுமியை, காதலனும் அவரது நண்பர்கள் இருவரும் கூட்டுப் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலனைக் கூட நம்பமுடியவில்லை... சிறுமிக்கு கொடுமை செய்த கயவர்கள் கைது...

புதுக்கோட்டை : கீரமங்கலம் அருகே உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த போது அங்கு சென்ற அந்த சிறுமியின் காதலனான அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (22) மற்றும் அவரது நண்பர்களான சின்ராஜ்(21), பிரசாத் (19) ஆகிய மூவரும் சிறுமியை அருகில் இருந்த தோட்டத்திற்கு தூக்கிச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்ததால் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு மூவரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்ததும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மது போதையில் இருந்த தம்பதியர்...! 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்கப்பட்ட மனைவி... !

தற்போது சிறுமி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காதலனின் நண்பர்கள் இருவரையும் கைது செய்துள்ள ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூவர் மீதும் போக்சோவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஆத்திரத்தில் பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த காதலன் ராஜா மருத்துவமனையில் போலிஸ் பாதுகாப்போடு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்ற இருவரையும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... ஓராண்டு பிறகு கிடைத்த நீதி...