மது போதையில் இருந்த தம்பதியர்...! 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்கப்பட்ட மனைவி...!

மது போதையில் இருந்த தம்பதியர்...! 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்கப்பட்ட மனைவி...!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அங்காளம்மன்  கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோமதி(45). இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு குண்டையூர் செல்லும் பாலம் அருகே போதையில்  இருவரும் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது மனைவி கோமதியை காணவில்லை என தேடியுள்ளார். இரண்டு நாட்களாக எங்கு தேடியும் அவரது மனைவி கிடைக்காத நிலையில் இன்று சந்திர நதியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது அந்த பெண் சேகரின் மனைவி கோமதி என்பது  தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல்  இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் இதுக் குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : ரூபாய் நோட்டில் மாற்றப்படுகிறதா காந்தியின் உருவப்படம்?!!!