காசு நம்பி அங்க போயிடாதீங்க!... - வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட பெண் பேட்டி!

வெளிநாட்டில் அதிக சம்பளம் நம்பி போன பெண் அங்கு சிக்கிய பெண்ணை மீட்டு அவரை வீட்டிற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

காசு நம்பி அங்க போயிடாதீங்க!... - வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட பெண் பேட்டி!

சமீப காலங்கலில் பல தமிழர்களின் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் பதை பதைக்க வைத்து வருகிறது. அதிலும், அரபு நாடுகளில் உள்ள தமிழர்கள் அதிக சம்பளம் வாங்குவதற்காக ஆசை பட்டு போனதும், அங்கு கஷ்டத்தை தாங்க முடியாமல் காப்பாற்றக் கேட்டு கதறி அழுவதுமாகவே இருக்கிறது.

இந்நிலையில், ஒரு பெண், ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்காக சென்ற நிலையில், அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறி அங்கு சென்றதும், கூறிய சம்பளத்தைக் கொடுக்காததாகக் கூறப்படுகிறது. சம்பளம் தான் தரவில்லை சரியான நேரத்திற்கு வேலை செய்தால் போதுமே என நம்பிய அந்த பெண்ணை சுமார் 22 மணி நேரம் வேலை செய்ய சொல்லி கொடுமை செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் பெண்... கதறி அழும் வீடியோ வைரல்...

இதனால், தன்னை இங்கிருந்து காப்பாற்றக் கூறியும், தனது தாய்நாட்டிற்கே திரும்பி அழைத்து வரக் கோரியும் தனது தாய் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த பெண், சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் சுதா ஜாஸ்மீன் என்றும் அடையாளம் காணபட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக அயலக அணி தலைவரும் வடசென்னை நாடாளுமன்ற  உறுப்பினருமான கலாநிதி  வீராசாமி முலம் முதலமைச்சருககும் இந்திய வெளியுறவு துறை மந்திரிக்கும் கோரினார். இந்திய தூதரக அதிகாரிகள் முலம் சுதா ஜாஸ்மின் மீட்கப்பட்டு தமிழ்நாடு  அரசின் வெளிநாட்டு  வாழ் தமிழர் நலத்துறை முலமாக விமானத்தில் சென்னை வந்தார்.

மேலும் படிக்க | பெண்ணை அரிவாளால் வெட்டி 16 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த கொடூரம்....

விமான நிலையத்தில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, சங்கர் எம்.எல்.ஏ, வெளிநாட்டு வாழ் நலத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். சால்வை போர்த்தி பூங்கொத்தோடு வரவேற்ற அதிகாரிகளுக்கு நன்றி கூறினார் சுதா ஜாஸ்மீன். பின், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,

“கடந்த 8 மாதத்திற்கு சென்றேன். வேலை தந்து கொடுமைப்ப்டுத்தியதால் சொந்த நாட்டிற்கு அனுப்ப கோரினேன். ஆனால் ஒன்றரை லட்சம் பணத்தை கேட்டு, அதனை தந்தும் அனுப்ப மறுத்தனர். என் தாயிடம் தகவல் தந்த பின், எம்.பி. முலமாக தூதரக அதிகாரிகள் என்னை மீட்டனர்.

ரூ.35 ஆயிரம் சம்பளம் எனகூறி ரூ.22 ஆயிரம் மட்டுமே தந்து ஓய்வும் தராமல், சுமார் 23 மணி நேரம் வேலை கொடுத்து கொட்மை படுத்தினர். என்னை மீட்டு, எனது குழந்தைகளை பார்க்க உதவி செய்த முதலமைச்சர் உட்பட அனைவருக்கும் நன்றி. அதிக சம்பளம் என யாரும் சென்று ஏமாறக்கூடாது”

என கூறினார். திமுக எம்.பி. கலாநிதி  வீராசாமி கூறுகையில், ஒரு மாதம் காலமாக அதிகாரிகள் முலம் மீட்டனர். தன்னார்வ தொண்டு அமைப்பு முலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அண்ணா சாலை கட்டிட விபத்தில் உயிரிழந்த இளப்பெண் - நில உரிமையாளரை இதுவரை கைது செய்யாத போலீஸ்....