அண்ணா சாலை கட்டிட விபத்தில் உயிரிழந்த இளப்பெண் - நில உரிமையாளரை இதுவரை கைது செய்யாத போலீஸ்..............

அண்ணா சாலை கட்டிட விபத்தில் உயிரிழந்த இளப்பெண் - நில உரிமையாளரை இதுவரை கைது செய்யாத போலீஸ்..............

அண்ணா சாலை கட்டிட விபத்தில் உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் நில உரிமையாளரை இதுவரை கைது செய்யாத போலீஸ் 

மாநகராட்சி மேயர் செய்தியாளர் சந்திப்பில் கட்டிட இடிப்புக்கு அனுமதி இருந்தும் நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை என தெரிவித்த சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? சென்னை மேயர்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாண்டி முருகேசன் மற்றும் பாண்டீஸ்வரி இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இளைய மகள் பத்மபிரியா எம்சிஏ படிப்பை முடித்துவிட்டு கடந்த டிசம்பர் மாதம் சென்னை பம்மலில் உள்ள தனது தாய் மாமா இல்லத்திற்கு வந்து  ஐடி துறையில் பணிபுரிவதாக கூறிவிட்டு வந்துள்ளார். தினந்தோறும் பம்மலில் இருந்து மெட்ரோ ரயில் மூலமாக அண்ணாசாலை வந்தடைந்து அங்கிருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது ஐடி நிறுவனத்திற்கு நடந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் பத்மபிரியா. இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல் மெட்ரோ ரயிலில் இருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் போது ஆனந்த் தியேட்டர் பேருந்து நிலையம் அருகே செல்லும் நிமிடத்தில் தனியார் கட்டிடத்தை இடிக்கும் பணியானது கடந்த ஒரு வாரமாக துவங்கி வந்துள்ளது. 

அப்பொழுது ஜே சி பி இயந்திரத்தை  கொண்டு கட்டிடத்தை இடிக்கின்ற பொழுது அந்த சுற்றுச்சுவர் பத்மபிரியா மீது விழுந்துள்ளது. இதில் படுகாயங்களுடன் சிக்கிக்கொண்ட பத்மபிரியா மருத்துவமனை அழைத்து செல்லும் முன்னே உயிரிழந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த மற்றொரு இளம் பெண் மற்றும் ஒரு இளைஞரும் படுகாயம் அடைந்துள்ளனர். 

உடனடியாக தகவல் அறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுற்றுச்சுவர் இடிபாடுகளில் சிக்கி இருந்த பத்மபிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் ஆனால் அவர் ஆம்புலன்ஸில் ஏற்றும் பொழுதே உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க |  சூப்பர் ஸ்டார் புகைப்படம் குரல் பயன்படுத்துக்கூடாது - பொது அறிவிப்பு

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அண்ணா சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் கொலை குற்றம் ஆகாத பிறருக்கு மரணம் விளைவிக்கும் செயல் செய்தல் என்ற பிரிவின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

மேலும் இந்தக் கட்டிடத்தை இடிக்க பயன்படுத்திய ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர் மற்றும் ஜேசிபி ஓட்டுநரான பாலாஜி மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய மூன்று நபரை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த கட்டிடத்தின் உரிமையாளர் சையது அலி பாத்திமா, கட்டிடத்தின் பொறியாளர் ஷேக் பாய் மற்றும் கட்டிடத்தின் ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கட்டிடத்திற்கான இடிக்கும் பணி தொடர்பாக உரிய அனுமதி பெற்றதாகவும், ஆனால் அதன் நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்

மேலும் படிக்க | சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அடைக்கப்படும் - சமூக விரோதிகள் தடுக்கப்படுவார்கள் - கி.வீரமணி

நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மாநகராட்சி அதிகாரிகள் மீது மேயர் நடவடிக்கை எடுத்துள்ளனரா என்று கேள்வியும் எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இடத்தின் உரிமையாளர்களையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை.

 மனமுடைந்த பத்மபிரியாவின் பெற்றோர்கள் எங்களுக்கு காசு பணம் தேவையில்லை, இது போன்ற இன்னொரு உயிர் இழப்பு ஏற்படக் கூடாது என்றும், அஜாக்கிரதையாக செயல்பட்ட நில உரிமையாளர், ஒப்பந்ததாரர், பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.