பெண்ணை அரிவாளால் வெட்டி 16 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த கொடூரம்...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி 16 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்ணை அரிவாளால் வெட்டி 16 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த கொடூரம்...

திருவள்ளூர் | ஆரணி அடுத்த  மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரியான உதயகுமார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 23ஆம் தேதி உதயகுமார் வழக்கம் போல காய்கறி வியாபாரத்திற்கு சென்றதும், இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மாடி வழியே வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டியபோது மாலதி மறுக்கவே அரிவாளால் வெட்டி கைகளை கட்டி போட்டு வாயையும் துணியால் கட்டியுள்ளார்.

மேலும் படிக்க | உயிரிழப்பும் ஒரு கோடி நிவாரண கோரிக்கையும்....

சிறிது நேரத்தில் பீரோ சாவி இருக்கும் இடத்தை மாலதி கூறியவுடன் மர்ம நபர் பீரோவில் இருந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு பூட்டப்பட்டிருந்த வீட்டின் கேட்டை திறந்து கொண்டு மீண்டும் வெளிப்புறம் பூட்டிவிட்டு தப்பிச் சென்றார். மாலதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனைத் தொடர்ந்து மாலதியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து ஆரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | துணிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது..!

கை, கால், உடல் என சுமார் ஐந்து இடங்களில் மாலதியை வெட்டிய மர்ம நபர் வீட்டில் இருந்து சுமார் 16.5 சவரன் நகை 1.5 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மல்லியங்குப்பம் சேர்ந்த அருண்குமார் (22,) மங்கலம் சேர்ந்த ஜெய்பீ (24)ஆகிய இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து இவர்களிடம் இருந்து 16.5 சவரன் நகைகள், 1.5 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | வங்கி ஊழியர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி...வசமாக சிக்கிய திருடன்!