200 மது பாக்கெட்டுகளை சிதற தேங்காய் போல உடைத்த பொது மக்கள்!!!

சங்கராபுரம் அருகே கணவன் மனைவி சேர்ட்ந்து கள்ளச்சாராய வியாபாரம் செய்த நிலையில், அவர்கள் தப்பி ஓடிவிட்டார். அவருக்கு போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.
200 மது பாக்கெட்டுகளை சிதற தேங்காய் போல உடைத்த பொது மக்கள்!!!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். அவர் மனைவி மீனாட்சி. இவர்கள் இருவரும் தொடர்ந்து கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனைத் தொடர்ந்து, சக்கராபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததன் பெயரில், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் காவலர்கள் சோதனை நடத்தினர். கள்ளச்சாராய வியாபாரிகளான ம்ுருகன் மற்றும் மீனாட்சி வீட்டில் சோதனை நடத்தியதில், அவர் வீட்டில், கிட்டத்தட்ட 200 பாக்கெட்டுகள் மது, மொத்தம் இரண்டு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்து, சாலையில் ஒரு கல்லை வைத்து, அதில், மது பாக்கெட்டுகளை சிதற தேங்காய் போல உடைத்து அங்கேயே அழித்தனர்.

ஆனால், சோதனை செய்வது குறித்த தகவல் அறிந்ததாலோ என்னவோ, முருகன் மற்றும் மீனாட்சி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால், தொடர்ந்து கள்ளச்சாராயம்  வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அந்த தம்பதியினரை, காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இந்த தம்பதியினர் பல ஆண்டுகளாகவே கள்ளச்சாராய வியாபார்த்தில் ஈடுப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com