
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மணம்பூண்டி,வீரபாண்டி, பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் இன்று அரகண்டநல்லூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மணம்பூண்டி கிராமத்தில் ஆறுமுகம் (47), சரவணன் (42), அசுரதன் (25) ஆகியோர் வீட்டில் இருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். இதேபோல் வீரபாண்டி கிராமத்தில் சாராயம் விற்ற லதா (32), நிர்மலா (45), லட்சுமி (52) ஆகியோரிடமிருந்து 100 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர், இவர்களிடமிருந்து மொத்தம் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,