விற்பனை மந்தமாக இருப்பதால் மண்பானை தொழிலாளர்கள் கண்ணீர்...

பழமையை மாறாமல் தமிழர்களின் மரபுப்படி புதுப்பானைகளை வாங்கி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மண்பானை தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விற்பனை மந்தமாக இருப்பதால் மண்பானை தொழிலாளர்கள் கண்ணீர்...

காஞ்சிபுரம் | இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் முழுவதும் தை முதல் நாள்தமிழர் திருநாள் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு சிறப்பு எதுவென்றால், அது சர்க்கரை பொங்கல் தான். அதுவும் மண்பானையில் பொங்க வைக்கும் அந்த சர்க்கரை பொங்கலுக்கான ருசியே தனி தான். ருசியைத் தாண்டி அது தான் நம் தமிழரின் பாரம்பரியம்.

பழையனவற்றை தூக்கி எரிய மனதில்லாதவர்கள், போகியன்று பழையனவற்றை எரித்து, பொங்கலன்று புதிய பானைகளை வாங்கி அதில் பொங்கல் வைத்து தினசரி வாழ்க்கைக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், சமீப் அகாலங்களில் எவர் சில்வர் பாத்திரங்கள் வைத்து பொங்கல் வைத்து வருகின்றனர். இதனால், மண்பானை செய்யும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் நிலைக்லைந்து வருகிறது.

மேலும் படிக்க | பொங்கலால் சூடு பிடித்த கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை...

அப்படி இருக்க, பொங்கல் போன்ற தமிழர் திருநாள் வைத்து தான் பல மண்பானை விற்பனையாளர்கள் தங்களது வாழ்க்கைஅயி மேம்படுத்த காத்திருப்பர். ஆனால், இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில், மண்பானை வியாபாரம் சிறிது மந்தமாக உள்ளதால், விற்பனையாளர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.

காஞ்சிபுரம்பேருந்து நிலையம் பகுதியில் வண்ணம் தீட்டிய மண்பானைகள் ரூ.500, ரூ.300, ரூ.250 என அளவிற்க்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது. மேலும் வண்ணம் தீட்டப்படாத மண்பானைகள் ரூ.100, ரூ.150 விற்கப்படுகிறது. ஆனால் நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் மண்பானை விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளதாக மண்பானை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | பொங்கல் பண்டிகையை ஒட்டி...கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!

மலிவான எவர்சில்வர் பாத்திரங்களின் விற்பனையால், மண்பானை வியாபாரம் மிகவும் நலிவடைந்துள்ளதாகவும், பழமை மாறாமல் தமிழர்களின் மரபுப்படி மண்பானைகளை வாங்கி அதில் பொங்கலிட வேண்டுமென்றும் மண்பானை விற்பனை தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

அவ்வாறு பொதுமக்கள் அதிகளவில் மண்பானைகளை வாங்கினால் தான் இத்தொழிலையே குலத்தொழிலாக எண்ணி ஆண்டு ஆண்டு காலமாக மண்பானைகள் விற்பனையில் ஈடுபட்டு வரும் மண்பானை விற்பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சமத்துவப்புரம் கொண்டாடிய சமத்துவ பொங்கல் திருவிழா...