பொங்கலால் சூடு பிடித்த கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை...

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், கனி அங்காடி வெறிச்சோடி காணப்படுகிறது.

பொங்கலால் சூடு பிடித்த கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை...

சென்னை | கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் கரும்பு - மஞ்சள் வியாபாரம் விடிய விடிய பரபரப்புடன் நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு சந்தை 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து செங்கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கொத்து உள்ளிட்ட பொருட்களின் விற்பனை, நள்ளிரவிலும் சூடுபிடித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பிற்காக 30ம் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | முதல் திருநங்கை கிராம உதவியாளரான ஸ்ருதிக்கு குவியும் பாராட்டுகள்...

அதே நேரத்தில், பழ அங்காடி மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனைகளை குறைந்து இருந்தும் மக்கள் பழம் வாங்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் பொங்கல் விழா கொண்டாடுபவர்கள் எப்போதுமே பழ அங்காடிக்கு வந்து பழங்களையும் பூஜை பொருட்களையும் வாங்கி செல்வார்கள் ஆனால் இந்த ஆண்டு வழக்கம் மாறி இருக்கிறது.

பண்டிகையொட்டி அதிக அளவில் சரக்கு வாங்கி வைத்திருப்பதாகவும் அடுத்த இரண்டு நாட்கள் விற்பனை நம்பி வியாபாரம் இருப்பதாகவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | பொங்கல் பண்டிகையை ஒட்டி...கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!