“படிப்பு முக்கியம்ன்னா பறை எதுக்கு இப்போ?” - எம்.பி கனிமொழியை ட்வீட்டில் கேலி செய்த எம்.பி ரவிகுமார்...

பறை தூக்கிய இளைஞர்களுக்கு லயோலா கல்லூரியில் இடம் கொடுத்த பின் பறை எதற்கு? என, எம்.பி. கனிமொழியை எம்.பி ரவிகுமார் கேட்டது கவனம் பெற்று வருகிறது.

“படிப்பு முக்கியம்ன்னா பறை எதுக்கு இப்போ?” - எம்.பி கனிமொழியை ட்வீட்டில் கேலி செய்த எம்.பி ரவிகுமார்...

தமிழர் திருநாளான தைத் திருநாளை, தமிழர்களின் தமிழ் புத்தாண்டு என அறிவித்தது அண்ணா தான். அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திய கலைஞர் மு.கருணாநிதி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, பல தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தில் செல்வ ரீதியாக பின் தங்கியவர்களுக்கு கல்வி மிகவும் முக்கியம் என பல வகையான நற்காரியங்கள் செய்ததும் தி.மு.க என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேலும் படிக்க | தமிழ்நாடு பெயரை மறுத்ததால் கமராஜருக்கு நிகழ்ந்தது என்ன..? ஆ.ராசா பேச்சு!

இதனைத் தொடர்ந்து, மறைந்த கலைஞரின் கனவுப்பாதையில் செல்லும் அவரது கட்சிக்காரர்களில் ஒருவரான எம்.பி. கனிமொழி, பல வகையான கருத்துகளை மக்களுக்காக பேசி வருகிறார். அந்த வகையில், தற்போது தைத்திருநாளன்று மாணவர்களுடன் பறையடித்து மகிழ்ந்த எம்.பி கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர் ட்வீட்டுகளை பதீட்டு, தனது தந்தையை நினைவு கூர்ந்தார்.

மேலும் படிக்க | மு.க.அழகிாி - உதயநிதி சந்திப்பு...திருமங்கலம் ஃபார்முலா...ஜெயக்குமாா் கருத்து!

அதில், 

2008 இல் கிராமிய கலைஞர்களோடு பொங்கல் விழா கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தானும் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றார். அங்கு ஐந்து / ஆறு வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அற்புதமாக பறை வாசித்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் அந்த சிறுவர்களின் கலைத் திறமையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். வாசித்து முடித்ததும் அந்த சிறுவர்களை அருகில் அழைத்து தலைவர் கலைஞர் அவர்கள் மிக அழகாக வாசிக்கிறீர்கள். இந்தக் கலையை நீங்கள் தொடர வேண்டும்.

மேலும் படிக்க | பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

அது போல எந்த காலத்திலும் உங்கள் படிப்பை நீங்கள் விட்டுவிடக்கூடாது, நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். எல்லோரும் கைதட்டிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அடிக்கடி அந்த சிறுவர்களைப் பற்றி நினைத்துக் கொள்வேன். இப்போது வாழ்கையில் என்ன செய்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைப்பதுண்டு. இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் அவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மேலும் படிக்க | மலம் கலந்த நீர் தொட்டியால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வீடு வீடாக சென்று விசாரணை செய்த மாவட்ட எஸ்.பி...

இவர்களில் எழிலரசு லயோலா கல்லூரியில் விலங்கியலும், தமிழ்வேந்தன் இசைக் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரும் பறையிசைக் கலைஞர்களாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

என பதிவிட்டிருந்தார். இது பல லைக்குகளைப் பெற்று வர, மறுப்பக்கம், எம்.பி. டாக்டர் டி. ரவிகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட் தொடருக்கு பதில் பதிவு போட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில்,

“லயோலா கல்லூரியில் படிக்கிறவர் ஏன் பறை அடிக்க வேண்டும்?”

என பதிவிட்டிருந்தார். இதனால், பெரும் பரபரப்பு கிளம்பியது. அதற்கு பல நெட்டிசன்கள், தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறது. அதில் ஒருவர், பறை என்பது ஒரு கலை, அதற்கும் படிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பத்வீட்டு வருகின்றனர்.

மேலும், ஒரு பாரம்பரிய கலையை பட்டதாரி பிடிக்கக்கூடாது எனக் கூறுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை எனவும் கமெண்ட் செய்து இது குறித்து பதில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ட்வீட் பெரும் சர்ச்சை ஆகி வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சூடுபிடித்த ஈரோடு இடைத்தேர்தல்...பிரச்சாரத்தை தொடங்கிய திமுக!