மலம் கலந்த நீர் தொட்டியால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வீடு வீடாக சென்று விசாரணை செய்த மாவட்ட எஸ்.பி...

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி. வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்.

மலம் கலந்த நீர் தொட்டியால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வீடு வீடாக சென்று விசாரணை செய்த மாவட்ட எஸ்.பி...

புதுக்கோட்டை | வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க | புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சனை - திமுக , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துதனர் நடத்தி 70-க்கும் மேற்பட்டோரிடம் விசாரண நடத்தினர் இந்த நிலையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் சம்பவ இடத்திற்கு சென்று என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தார்.

அதன் பின் தமிழ்நாட்டில் உள்ள சமூக அமைப்புகள் பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று  என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர் இதனிடையே இந்த வழக்கு சிபி சி ஐடி யிடம் மாற்றப்பட்டது அவர்கள் கடந்த ஐந்து நாட்களாக அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கருப்புக் கொடி வீடுகளில் ஏற்றி ஆர்ப்பாட்டம்...

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அப்பகுதியில் சென்று தற்போது வீடு வீடாக ஆய்வு செய்து வருகிறார் இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதிக்குள் வெளி நபர்களை உள்ளே அனுமதிக்காமல் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | புதுக்கோட்டையில் மேலும் ஒரு தீண்டாமை சம்பவம்..! - கண்மாயில் குளித்த பெண்கள் அலறல்..!