சூடுபிடித்த ஈரோடு இடைத்தேர்தல்...பிரச்சாரத்தை தொடங்கிய திமுக!

சூடுபிடித்த ஈரோடு இடைத்தேர்தல்...பிரச்சாரத்தை தொடங்கிய திமுக!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கே.என். நேரு ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி போட்டி :

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : மநீம கட்சியின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்க்கு ஆதரவா? எகிறும் எதிர்ப்பார்ப்பு!

பிரச்சாரம் ஆரம்பம் :

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கே.என். நேரு ஆகியோர், ஈரோடு பெரியார் நகர் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தனர்.