சாய் பாபா கோவிலில் துர்கா ஸ்டாலின்...

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

சாய் பாபா கோவிலில் துர்கா ஸ்டாலின்...

104 வது சாய்பாபா சமாதி தினத்தை முன்னிட்டு மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் ஏராளமான மக்கள் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தாமரையுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க | ஸ்டாலின் மனைவி மோடியின் படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும் - சீமான்..!

சாய் பாபா கோவிலை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு சாய்பாபாவிற்கு மாலை அணிவித்து தரிசனம் மேற்கொண்டார்.வாரம் தோறும்  மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வருவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் சாய் பாபாவின் சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க | அண்ணாமலையார் கோவிலில் சாமிதரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்...

சாய் பாபா சமாதி தினத்தை முன்னிட்டு கோவிலில் ஐந்தாயிரம் நபர்களுக்கு அன்னதானமும் இன்று மயிலாப்பூரில் நான்கு மாட வீதிகளிலும் சாய்பாபா வீதி உலா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.