ஸ்டாலின் மனைவி மோடியின் படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும் - சீமான்..!

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தல்..1

ஸ்டாலின் மனைவி மோடியின் படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும் - சீமான்..!

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் சூடு பறக்க ஆரம்பித்து முடிந்திருக்கும் சூழலில், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை விமர்சனம் செய்து வசமாக மாட்டிக் கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டது. ஆளுங்கட்சியை விமர்சித்து எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியை விமர்சித்து ஆளுங்கட்சியும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை விமர்சித்து பிற கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். 

17-ம் தேதியுடன்தேர்தல் பரப்புரை முடிந்திருப்பதால், ஆர அமர இனி தான் அனைத்து கட்சி தலைவர்கள் எங்கெங்கு என்ன வாய் விட்டார்கள் என்பதை கவனித்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஒரு ஒருதராக புகார் தெரிவிப்பவர். ஆனால் பேசிய உடனேயே புகார் பெற்றவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான். நடிகராக இருந்தவர் அரசியல் மீது கொண்ட பற்றால் அரசியலில் அதிரடியாக இறங்கி தேர்தல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இவரது பேச்சுக்கு இன்றைய இளசுகள் ரசிகர்கள் என்றே கூறலாம். மேடை ஏறி இவர் பேசும் பேச்சுக்கு விசில் சந்தங்களும், சிரிப்பலைகளும் பயங்கரமாக எழும். எழுச்சிகரமாக பல இடங்களில் பேசி மக்களின் மனதில் இவருக்கு வாக்களித்தால் என்ன என்ற எண்ணத்தை தோன்ற வைத்து விடுவார். அப்படி அவர் உணர்ச்சிகரமாக பேசும் போது, இடை இடையில் பல வார்த்தைகளையும், கருத்துகளையும் விட்டு சர்சையிலும் சிக்கிக் கொள்வார். 

அரசியல் தலைவர்களை ஒருமையில் பேசுவது, அவர்களது குடும்பங்களை சாடுவது என அவ்வப்போது இவர் மட்டுமின்றி இவரது கட்சியை சேர்ந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையில் ஆக்ரோஷமாக ஈடுபட்ட சீமான், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தலில் போட்டியிடுகின்ற 60-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனியாக போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என திமுகவினர் பிரசாரம் செய்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துகள், எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அடிப்படை வசதிகளைக்கூட மாற்றித் தராத ஆட்சியாளர்களாக தற்போது இருப்பதாகவும் சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், வரும் 2024, 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். திமுக, அதிமுக கட்சிகளுக்கே மாற்றி மாற்றி வாக்களித்தால் நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. இன்றிருக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காததற்கு காரணம் திராவிட கட்சிகள் தான் என்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பொய் வழக்கு போட்டு கைது செய்யும் திமுக, உண்மையாக தில் இருந்தால் பாஜக வேட்பாளர் மீது வழக்கு போட்டு கைது செய்யுமா? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில், பாஜகவை எதிர்த்து நிற்க பயந்து கூட்டணி கட்சிகளுக்கு திமுக இடத்தை ஒதுக்கிக் கொடுத்ததாக குற்றம்சாட்டிய சீமான், ”சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு காரணம் மோடி தான், அந்தவகையில் நியாயமாக பார்த்தால் துர்கா ஸ்டாலின் பிரதமர் மோடி படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும்” என்று அவர் பேசிய சர்ச்சையாகியுள்ளது. முதலமைச்சரின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.