அண்ணாமலையார் கோவிலில் சாமிதரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் கோவிலில் சாமிதரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 19- ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல ஆயிரம் மக்கள்  தினந்தோறும், அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை சிறப்பு வழிபாடுகள் செய்து, சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.மேலும் கோவிலுக்கு வருகை தந்த முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் மக்களோடு மக்களாய் சென்று எளிய முறையில் சாமி தரிசனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது..