
கும்பாபிஷேக விழாவிற்கான மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பழனி கோயிலில் குடமுழுக்கு பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது 16 கோடி ரூபாயில் கற்கள் மற்றும் அலங்கார வேலைக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5 கோடி ரூபாயில் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன பணிகள் நடைபெற்றுவருகிறது. ஒட்டு மொத்தமாக 88 பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் திருக்கோயில் நிதி மூலமாக 26 பணிகளும், உபயதாரர்கள் மூலமாக 62 பணிகளும் நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் நிறைபெற்று ஜனவரி 27 ஆம் தேதி நல்ல முறையில் குடைமுழுக்கு நடைபெறும் எனவும், பழனி முருகன் கோவிலுக்கு வருடத்திற்கு சராசரியாக ஒரு கோடியே இருபது இலட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, பழனி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 200 கோடி ரூபாயில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை துவங்குவதற்கான டெண்டர்கள் விடப்பட்டும் எனவும் அதற்காக முழு வீட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.