
அமைச்சராக பதவி ஏற்று முதல் முறையாக கோவைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று நடக்கவிருக்கும் 3 அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.முதல் நிகழ்ச்சியாக கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் பணிக்காக 6.55 கோடியும் மற்றும் விளையாட்டு அரங்கை மேம்படுத்த சிறப்பு மராமத்து பணிகளுக்காக 65.15 லட்சம், மதிப்பிலான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதனை இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார்.இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் படிக்க | 50வது ஆண்டு இராஜாஜி நினைவு தினம்: அமைச்சர்கள் மரியாதை
இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அடிக்கல் நட்ட உள்ள பணிகள் மற்றும் மதிப்பீடுமொத்தம் - 5936 பணிகள் துவக்கி வைக்கப்பட உள்ளது, மதிப்பு 790.42 கோடி.திறப்பு விழா 1115 பணிகள்.ரூ229.84 கோடி மதிப்பீடு.நலத்திட்டம் பெறும் பயனாளிகள் 25042 .ரூ368.20 கோடி மதிப்பீடு.