அக்னிபாத் திட்டம்.....பதிலளிக்குமா மத்திய அரசு...!!! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

அக்னிபாத் திட்டம்.....பதிலளிக்குமா மத்திய அரசு...!!! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான வயதுடைவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தற்காலிக வேலை வாய்ப்பை உருவாக்கும் இந்த அக்னி திட்டத்திற்கு எதிராக பீகார் உத்தரப் பிரதேசம் தெலங்கானா அரியானா மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வன்முறை நிகழ்ந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் நாட்டிலுள்ள பிற உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்கஅக்னிபாத் - வரமா?சாபமா?

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமனுக்களை விசாரித்த கடந்த ஜூலை 19 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், போப்பண்ணா ,சூரியகாந்த் ஆகியோர் அமர்வு, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் அது மட்டுமில்லாமல் உயர் நீதிமன்றங்களுக்கு இருக்கக் கூடிய அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் விரும்புகிறோம். எனவே உச்ச நீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளையும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுகிறோம் அதே நேரத்தில் பிற உயர் நீதிமன்றங்கள் தங்கள் முன்பாக உள்ள இந்த திட்டத்திற்கு எதிரான வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றலாம் யாருக்கேனும் புதிதாக மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்பாக தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து மாற்ற ப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இந்த திட்டத்திற்கு இடைகால தடை வித்து மனுவை விசாரிக்க வேண்டும் என மனுதார்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது, அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டத்திற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட  மனுக்க்கள் மீது நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

இதையும் படிக்க: காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி!!!!