என்ன நடந்தது இந்தியாவின் கடைசி சிறுத்தைகளுக்கு...!!!

என்ன நடந்தது இந்தியாவின் கடைசி சிறுத்தைகளுக்கு...!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்ட எட்டு சிறுத்தைகளுக்கு நாடு முழுவதும் இருந்து பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. MyGov தளத்தில் 750க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் மில்கா, சேடக், வாயு, ஸ்வஸ்தி ஆகிய பெயர்களும் அடங்கும். இது தவிர, சிறுத்தை மறுசீரமைப்பு பிரச்சாரத்திற்கும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மனதின் குரல்:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 8 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளன 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், சிறுத்தைகள் மற்றும் பிரச்சாரத்திற்கான பெயர்களை வழங்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

MyGov தளத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்குமாறும் மக்களை கேட்டுக் கொண்டிருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.  விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 26 ஆகும்.

மேலும் தெரிந்துகொள்க: நமீபியா சிறுத்தைகளுக்கு பெயர்சூட்டும் போட்டி!!! பிரதமர் அழைப்பு!!!பரிசு என்ன தெரியுமா??

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சிறுத்தைகள் புதிய சூழலுக்கு மாற சிறிது காலம் எடுக்கும் என்றும், ஒரு பணிக்குழு சிறுத்தைகளை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அதன் பிறகு பூங்காவை பொதுமக்கள் பார்வைக்காக திறக்க முடியுமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் கூறினார். சிறுத்தைகளைப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்று நாடு முழுவதும் இருந்து மக்கள் தனக்கு செய்திகள் அனுப்புகின்றனர் என்றும் பிரதமர் மோடி கூறினார். 

MyGov தளத்தில் இதுவரை 750 க்கும் மேற்பட்டோர் சிறுத்தைகளுக்கு வீர், பங்கி, பைரவ், பிரம்மா, ருத்ரா, துர்கா, கௌரி, பத்ரா, சக்தி, பிரஹஸ்பதி, சதுர், வீரா, ரக்ஷா, மேதா மற்றும் மயூர் போன்ற பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில், 800-க்கும் மேற்பட்டோர் 'குனோ கா குந்தன்', 'மிஷன் சித்ரக்', 'விவா' மற்றும் 'சிட்வால்' போன்ற தலைப்புகளை பிரச்சாரத்திற்கு பரிந்துரைத்துள்ளனர்.

தற்போதைய பெயர்கள்:

நமீபியாவைச் சேர்ந்த சிறுத்தைகளில் ஒன்றிற்கு பிரதமர் நரேந்திர மோடியே பெயரிட்டுள்ளார். இந்த சிறுத்தைகளின் தற்போதைய பெயர்கள் - ஆஷா, சீயா, ஓபன், சிபில்லி, சியாசா, சவன்னா, சாஷா மற்றும் ஃப்ரெடி.

இந்தியாவின் கடைசி சிறுத்தை:

இந்தியாவில் கடைசியாக சிறுத்தை 1948 இல் காணப்பட்டது.  அதே ஆண்டில், கொரிய மன்னர் ராமானுஜ் சிங்தேவ் மூன்று சிறுத்தைகளை வேட்டையாடினார். அதன் பிறகு இந்தியாவில் சிறுத்தைகள் காணப்படவில்லை.  இதற்குப் பிறகு, 1952 இல், இந்தியாவில் உள்ள சிறுத்தை இனம் இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

1970ல் ஈரானிய சிறுத்தைகள்:

1970ல் ஈரானில் இருந்து ஆசிய சிறுத்தைகளை கொண்டுவர இந்திய அரசு முயற்சி செய்தது. இதற்காக ஈரான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. மத்திய அரசின் தற்போதைய திட்டப்படி ஐந்தாண்டுகளில் மேலும் 50 சிறுத்தைகள் கொண்டுவரப்படும்.  

இதையும் படிக்க: பிஎஃப்ஐ என்றால் என்ன? அது எப்படி நிறுவப்பட்டது? என்ன ஆபத்தான நோக்கத்துடன் இது செயல்படுகிறது? தெரிந்துகொள்வோம்....!!!